எண்ணம் போல் வாழ்க்கை
எண்ணம் போல் வாழ்க்கை ஒரு நாள் குருவை பார்க்க ஒருவன் சென்றிருந்தார். அவர் பாதம் தொட்டு கும்பிட்டுவிட்டு, அவர் பாதம் கழுவி பின் குருவை பணிந்து வணங்கி நின்றான்.... அவனை மேலும் கீழுமாக பார்த்தவர், ஏதோ எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறாய் போல என்று முகத்தை பார்த்து கேட்டார். அவன் மௌனமாக ஆமாம்.! என தலையாட்டிவிட்டு மெல்ல ஆரம்பித்தான். நான் நினைப்பதெல்லாம் நடக்கவேண்டும். இதற்கு என்ன வழி..? என்று ஒரு கேள்வியை கேட்டான். குரு புன்முறுவலாக சிரித்துக்கொண்டே, அவனை அருகில் அழைத்தார். மெல்ல அவன் தலையை கோதிவிட்டு, கன்னங்களை தட்டிக்கொடுக்க..... அவனுக்கு முணுக்கென கண்களில் எட்டிப்பார்த்த கண்ணீரை மெதுவாக துடைத்து விட்டு, என் சிஷ்யன் கலங்கக்கூடாது என்று ஆறுதல் படுத்தியவர், நான் ஒரு கதை சொல்லப் போகிறேன், பொறுமையாக கேள் என்று மெல்ல ஆரம்பித்தார். ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தான். ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். வழியில் அவன் பரிவாரங்களை விட்டு வழி தவறி போய் விட்டான். அவர்களை தேடித் தேடி காட்டுக்குள் ரொம்ப தூரம் போய் விட்டான். ரொம்ப களைப்ப...