Posts

Showing posts from 2021

வேலை செய்யாவிடில் உணவு இல்லை !!!

  வேலை செய்யாவிடில் உணவு இல்லை !!! ஹ்யகுஜோ என்பவர் ஒரு ஜென் மாஸ்டர். அவர் எண்பது வயதிலும் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்வதை கொள்கையாக கொண்டு வாழ்ந்து வந்தார். மேலும் அவர் தான் முதுமை அடைந்ததையும் பொருட்படுத்தாமல், அவர் தங்கியிருந்த இடத்தில் உள்ள தோட்டத்தை சீரமைப்பது, மரங்களுக்கு நீர் ஊற்றுவது, களை அறுப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார். அதைக் கண்ட ஹ்யகுஜோவின் சீடர்கள், இந்த வயதிலும் தங்கள் குரு வேலை செய்வதைக் கண்டு வருத்தப்பட்டனர். அதை அவர்கள் தங்கள் குருவிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. எனவே சீடர்கள் இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடிவு செய்தனர். அதனால் அந்த சீடர்கள் குரு வேலை செய்யப் பயன்படுத்தும் கருவிகளான மம்முட்டி, கடப்பாறை போன்றவைகளை, குருவின் கண்களுக்குப் புலப்படாதவாறு மறைத்து வைத்தனர். ஆனால், குருவோ! வேலை செய்யாத காரணத்தினால், அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்தார். சீடர்களும் இதை கவனித்து வந்தனர். பின் மறுநாளும் குரு சாப்பிடாமல் வெறுமையாக அமர்ந்திருந்தார். இதைக் கண்ட சீடர்கள் வேறு வழியின்றி அந்த பொருட்களை குருவிடமே ஒப்படைக்க முடிவெடுத்து குருவின் கண்களுக்குப் தென்படும...

அவரவர் வேலையே செய்வோம் - தேள் ஒன்று

  அவரவர் வேலையே செய்வோம் நதியோரம் இரண்டு துறவிகள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். தேள் ஒன்று கவனம் தவறி நீரில் விழுந்து விட்டது. ஒரு துறவி அந்த தேளினை எடுத்து தரையில் விட்டார். அப்போது அந்த தேள் அவரை கொட்டியது. கொட்டிய வேகத்தில் மீண்டும் நீரில் விழுந்து விட்டது. மீண்டும் அதனை எடுத்து அந்த துறவி மேலே விட்டார். தேள் மீண்டும் கொட்டிவிட்டு தண்ணீரில் விழுந்து விட்டது. இது தொடர்ந்து நடந்தது. இதைப் பார்த்த இன்னொரு துறவி, அதுதான் கடிக்கிறதே அதை ஏன் காப்பாற்றுகின்றீர் என்று கேட்டார். அதற்கு அந்த துறவி, கொட்டுவது தேளின் இயல்பு, காப்பாற்றுவது என்னுடைய இயல்பு என்று சாதாரணமாக சொன்னார். நீதி:  அதனதன் இயல்பில் அவரவர் வேலையை செய்வோம்.

பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 1.நார்ச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாகும். 2. உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும். 3.உடலுக்கு குளிர்ச்சித் தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கிறது. 4. பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேகவைத்து, வெயிலில் காயவைத்து, பின் அதை, அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாகும். 5. பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும். 6. சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சனை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 7. பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். கற்பக விருட்சம் என்ற போற்றப்படும் ஒரே மரம் இந்த பனை மரம் தான். நமது நாட்டில் அழிந்து கொண்டிருக்கும் மர வகைகளில் இந்த‌ பனைமரம் முதலிடத்தில் உள்ள ‍ த...

எண்ணம் போல் வாழ்க்கை

 எண்ணம் போல் வாழ்க்கை ஒரு நாள் குருவை பார்க்க ஒருவன் சென்றிருந்தார். அவர் பாதம் தொட்டு கும்பிட்டுவிட்டு,               அவர் பாதம் கழுவி பின் குருவை பணிந்து வணங்கி நின்றான்.... அவனை மேலும் கீழுமாக பார்த்தவர், ஏதோ எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறாய் போல என்று முகத்தை பார்த்து கேட்டார். அவன் மௌனமாக ஆமாம்.! என தலையாட்டிவிட்டு மெல்ல ஆரம்பித்தான். நான் நினைப்பதெல்லாம் நடக்கவேண்டும். இதற்கு என்ன வழி..?  என்று ஒரு கேள்வியை கேட்டான். குரு புன்முறுவலாக சிரித்துக்கொண்டே, அவனை அருகில் அழைத்தார். மெல்ல அவன் தலையை கோதிவிட்டு, கன்னங்களை தட்டிக்கொடுக்க..... அவனுக்கு முணுக்கென  கண்களில் எட்டிப்பார்த்த கண்ணீரை மெதுவாக துடைத்து விட்டு, என் சிஷ்யன் கலங்கக்கூடாது என்று ஆறுதல் படுத்தியவர், நான் ஒரு கதை சொல்லப் போகிறேன், பொறுமையாக கேள் என்று மெல்ல ஆரம்பித்தார். ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தான். ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். வழியில் அவன் பரிவாரங்களை விட்டு வழி தவறி போய் விட்டான். அவர்களை தேடித் தேடி காட்டுக்குள் ரொம்ப தூரம் போய் விட்டான். ரொம்ப களைப்ப...

shopping cart website using word press - Tidal TV K.Purusothaman

Image