இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியலுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் வாழ்க்கைக்கு உதவும் பொன்மொழிகள் பலவற்றை கூறியுள்ளார். அவர் கூறிய ஒவ்வொன்றும் நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர். நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன. ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல… உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே… ஒரு முறை வந்தால் அது கனவு. இரு முறை வந்தால் அது ஆசை, பல முறை வந்தால் அது லட்சியம். உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே… ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை. அழகை பற்றி கனவு காணாதீர்கள்! அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையையே அழகா...
Comments
Post a Comment