அப்துல் கலாம் பொன்மொழிகள் | Abdul Kalam Quotes in Tamil







இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியலுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் வாழ்க்கைக்கு உதவும் பொன்மொழிகள் பலவற்றை கூறியுள்ளார். அவர் கூறிய ஒவ்வொன்றும் நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.


நாம் அனைவருக்கும்

ஒரே மாதிரி திறமை

இல்லாமல் இருக்கலாம்.

ஆனால்,

அனைவருக்கும் திறமையை

வளர்த்துக் கொள்ள ஒரே

மாதிரி வாய்ப்புகள்

உள்ளன.


ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல…

உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே…





ஒரு முறை வந்தால் அது கனவு.

இரு முறை வந்தால் அது ஆசை,

பல முறை வந்தால் அது லட்சியம்.



உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே…

ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.



நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்,

எப்போதுமே மண்டியிடுவது இல்லை.



அழகை பற்றி கனவு காணாதீர்கள்!

அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.

கடமையை பற்றி கனவு காணுங்கள்,

அது உங்கள் வாழ்க்கையையே அழகாக்கிவிடும்!




கனவு காணுங்கள்!

ஆனால் கனவு என்பது

நீ தூக்கத்தில் காண்பது அல்ல..

உன்னை தூங்க விடாமல்

செய்வதே (இலட்சிய) கனவு








கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள்!

எண்ணங்களைச் செயல்களாக மாற்றுங்கள்!



கஷ்டம் வரும் போது

கண்ணை மூடாதே,

அது உன்னை கொன்றுவிடும்.

கண்ணை திறந்து பார்,

அதை வென்றுவிடலாம்.




உனது கற்பனையை முதலீடாக நீ முன்வைத்தால்

அது உனக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளைத் தேடித் தரும்!




ஒரு மனிதனின் அழகானது அவனது நிறமோ, பணமோ அல்ல!

அவனது அன்பான குணமும் சாந்தமான மனதும் தான் அழகு! – அப்துல் கலாம்

 

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால்

இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

 

அறிவையும் முன்னேற்றத்தையும் தருகிறது சிந்தனை.

சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தால்தான் சாதனை படைக்க முடியும். – அப்துல் கலாம்



இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும்

வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே

படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. – அப்துல் கலாம்

 

நம் தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே,

உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்! – அப்துல் கலாம்




வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான்,

வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. – அப்துல் கலாம்

 

உனது செயல்களின் பலன் உனக்கே சொந்தம்!

எனது செயல்களின் பலன் எனக்கே சொந்தம்!

எனவே நற்செயலே நன்மை தரும்! – அப்துல் கலாம்




ஒரு முட்டாள் தன்னை முட்டாள்

என்று உணரும் தருணத்தில்

புத்திசாலியாகின்றான்.

ஆனால்,

ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி

என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில்

முட்டாளாகின்றான். – அப்துல் கலாம்

 

கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை,

கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.






ஒரு மாணவரின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று கேள்வி கேட்பது.

மாணவர்கள் கேள்விகள் கேட்கட்டும்.

 

குழந்தைகள் தனித்துவமாக இருக்க போராடிக் கொண்டிருக்கும் வேளையில்,

அவர்களைச் சுற்றியுள்ள உலகம் அவர்களை

எல்லோரையும் போல் காட்ட எல்லா வழிகளிலும் முயற்சிக்கிறது.

 

வெற்றிகரமான கணிதம் கூட பூஜ்ஜியத்தில் தான் தொடங்கும் என்பதால்



முதல் முயற்சியில் தோல்வியடைந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்.


Comments

Popular posts from this blog

poet ravidasan கவிஞர் ரவிதாசன்