#நக்கீரர் "நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே"
"நெற்றிக் கண்ணை திறப்பினும்
குற்றம் குற்றமே"
திருமங்கலம் ஆலம்பட்டிக்கு அருகில் உள்ள திரளி கிராமம் ஆகும்.
கீரம் என்றால் சொல் என்று பொருள்!
நக்கீரர் என்றால் நல்ல
இனிய சொற்களையுடையவர் என்று பொருள்.
நக்கீரர் தனது புகழ்பெற்ற "திருமுருகாற்றுப்படை' நூலைப் படைத்ததற்கு ஒரு வரலாறு உண்டு.
கற்கிமுகி' என்று ஒரு பெண்பூதம். சிவபெருமானிடம் அளவற்ற பக்தி உண்டு அந்த பூதத்திற்கு. என்னமாதிரி பக்தி தெரியுமா? சிவபூஜை செய்பவர்கள் அதைச் சரியாகக் கவனத்துடன் செய்யாமல் முறை வழுவிச் செய்தால் உடனே அது அவர்களைத் தூரத்தில் கொண்டுபோய் ஒரு குகைக்குள் அடைத்துப் போட்டு விடும்!
ஆனால் அவர்களுக்கு வேளா வேளைக்கு நல்ல சத்துள்ள சாப்பாடு போட்டு விடும்! அதனால் குகைக்குள் அடைபட்டு கிடக்கும் ஆசாமிகளுக்கு பெரும் மகிழ்ச்சி! எந்த வேலையும் செய்யாமல் சும்மா கிடப்பவர்களுக்கு யார் நேரம் தவறாமல் நல்ல அருமையான சாப்பாடு போட்டு வளர்ப்பார்கள்? ஆனால் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இந்தப் பூதம் இவர்களுக்குச் சத்தான சாப்பாடு போட்டு இவர்களைக் கொழுக்க வைப்பது எதற்குத் தெரியுமா? சரியாக 1000 பேர் குகைக்குள் கைதிகளாய் வந்து விட்டால் ஒரு சுபயோக சுப தினத்தில் அந்த ஆயிரம் பேரையும் ஒரேயடியாய் விழுங்கித் தன் பசியைத் தீர்த்துக் கொள்ளும்!
அப்போது குகைக் கைதிகளாய் இருந்தவர்கள் 999 பேர். இன்னும் ஒரு நபர் கிடைத்து விட்டால் 1000 பேராகி விடும். அந்த ஒருவருக்காக அந்தப் பூதம் எங்கும் அலைந்து திரிந்து தேடிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் நக்கீரர் ஓர் ஊரின் குளத்தில் நீராடித் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டு குளக்கரையில் அமர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் "கற்கிமுகி' என்ற அந்த பூதம் குளக்கரைக்கு அருகில் ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தின் மீது வந்து அமர்ந்து நக்கீரரை பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு கிளையை அசைத்து ஓர் இலையை உதிர்த்தது.
மரத்திலிருந்து உதிர்ந்த இலை பாதி நீரிலும் பிரதி நிலத்திலுமாய் விழுந்தது. நக்கீரர் இதைப் பார்க்க நேரிட்டது. அதேநேரத்தில் நீரில் விழுந்த பாதி இலை மீனாகவும் நிலத்தில் விழுந்த பகுதி பறவையாகவும் மாறியது! மீன் பறவையை நீரினுள் இழுக்கிறது. பறவை மீனை நிலத்துக்கு இழுக்கிறது! இந்த அதிசயப் போராட்டத்தைப் பார்த்த வியப்பில் நக்கீரர் மனம் சிவபூஜையில் பதியவில்லை! இதைத்தானே பூதம் எதிர்ப்பார்த்தது.
ஆயிரமாவது ஆள் அகப்பட்டு விட்டான் என்று அகமகிழ்ந்து
நக்கீரரைத் தூக்கிக் கொண்டு போய் தனது குகையில் அடைத்து விட்டது!
சிவபூஜை வழுவியவர்கள் எண்ணிக்கை இந்த நபரோடு ஆயிரம் ஆகிவிட்டது. எல்லோரும் எனக்கு விருந்து படைக்கத் தயாராய் இருங்கள். நான் போய்க் குளித்துவிட்டு
வருகிறேன்!'' என்று அந்தப்பூதம்
குளித்து வரக் கிளம்பிற்று!
குகையில் ஏற்கெனவே அடைபட்டுக் கிடந்தவர்கள் எல்லாம் புதிதாய் உள்ளே வந்த நக்கீரரைப் பார்த்து கண்டபடி திட்டினார்கள்! ""மகாபாவி! நீதான் எங்களுக்கு எமனாக வந்து சேர்ந்தாய். நீ மட்டும் வராமல் இருந்தால் அந்தப் பூதம் இன்னும் எத்தனையோ காலம் எங்களுக்கு அருமையாய் சாப்பாடு போட்டு வளர்த்திருக்கும். எல்லாவற்றையும் கெடுத்து குட்டிச் சுவராக்கி விட்டாயே! நீ வந்ததால் எண்ணிக்கை ஆயிரம் ஆகிவிட்டது. இப்போது அந்தப் பூதம் நம் எல்லோரையும் ஒரேயடியாய் விழுங்கப் போகிறதே... அய்யோ...
அய்யோ!'' என்று நக்கீரரைத் திட்டியும் தங்களுக்குள் புலம்பியும் அழுது தீர்த்தார்கள்!
நக்கீரருக்கு அவர்களைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.
அதனால் அவர்களைப் பார்த்து, ""நீங்கள் எவரும் இப்படி பயந்து சாகவேண்டாம். என் அப்பன் முருகப்பெருமான் இருக்கிறான். அவனை மனதார நினைத்து உருகி வேண்டினால் ஒரு கணத்தில் நம் துயரைத் தீர்த்தருள்வான். என்றார்.
அந்நேரத்தில் திருமுருகாற்றப்படை என்ற பாடலைப் பாடினார் நக்கீரர். இப்பாடலால் திருமுருகன் எழுந்து வந்தார்.
தன் கதை ஆயுத்தினால் அப்பூதத்தினைக் கொன்றார் முருகப்பெருமான்.
நல்லார் ஒருவர் உளரேல் பல்லோருக்கும் மழை பெய்து பயன் தருவதைப் போல, நக்கீரரால் மற்ற சிவபக்தர்களின் உயிர்களும் காப்பற்றப்பெற்றது.
முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, “திருமுருகாற்றுப்படை’ (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது.
பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, “ஆறுபடை’ என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.
இதன் பிறகு காளத்தி என்ற இடத்திற்குச் சென்று அங்குள்ள பொன்முகரி ஆற்றில் நக்கீரர் நீராடினார். நீராடி அவர் கங்கையின் மேற்கில் உள்ள மலையான கைலாய மலையில் எழுந்தார். அவரின் கைலாய எண்ணம் இதன்வழி நிறைவேறியது.
இதன் தொடர்வாக கயிலை பாதி காளாத்தி பாதி, அந்தாதி, காரெட்டு, கண்ணப்பர் தம்மறம், எழுக் கூற்றிருக்கை, தேவநற்பாணி போன்ற நூல்களை அவர் படைத்தளித்தார்.
இவ்வாறு இறைத்தொண்டு, தமிழ்த்தொண்டாற்றிய நக்கீரர் தன் வாழ்நாளின் நிறைவில் சோதியுள் கலந்தார்.
நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..
காளஹஸ்தி
Comments
Post a Comment