முந்தேசுசுவரி தேவி கோயில் (The Mundeshwari Devi Temple)
முந்தேசுசுவரி தேவி கோயில் (The Mundeshwari Devi Temple)
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இருக்கும் ஒரு கோவிலாகும். இம்மாநிலத்தின் கைமூர் மாவட்டத்தில் உள்ள கவுரா என்ற பகுதியில் இருக்கும் முந்தேசுவரி மலையில் இக்கோவில் அமைந்துள்ளது. இறைவன் சிவன் மற்றும் சக்தியை வழிபடும் புனித தலமாக அர்பணிக்கப் பட்டுள்ள இக்கோவில் இந்தியாவின் மிகவும் பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது[1][2][3]. பண்டைய காலத்திலிருந்து இன்றும் கூட செயல்பட்டுவரும் மிகப்பழமையான கோவில் என்றும் இதைக் கருதுகிறார்கள்[4][5]. இக்கோவில் கி.பி. 625 ஆம் ஆண்டு கட்டப்பட்டதென இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் அமைத்த தகவல்பலகை தெரிவிக்கிறது[6]. இதை உறுதிபடுத்தும் வகையில் கி.பி.625 ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் இக்கோவிலை ஒரு பழங்கால நினைவுச் சின்னமாக 1915 ஆம் ஆண்டு முதல் பாதுகாத்து வருகிறது.
பாட்னா, கயா அல்லது வாரணாசி ஆகிய ஊர்களின் சாலை வழியாக முந்தேசுவரி கோவிலைச் சென்றடைய முடியும். மோகனியா-பாபுவா சாலை இரயில் நிலையம் கோயிலுக்கு அருகில் உள்ள இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவை சாலை வழியாகக் கடந்து கோயிலை அடையலாம். வாரணாசி நகரத்திலுள்ள லால் பகதூர் சாசுத்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம், இக்கோயிலுக்கு மிக அருகிலுள்ள விமான நிலையமாகும். இவ்விமான நிலையம் கோயிலிலிருந்து 102 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஏர் இந்தியா விமானம், சிபைசுசெட் விமானம் போன்ற உள் நாட்டுச் சேவை விமானங்களும், ஏர் இந்தியா விமானம், தாய்லாந்து ஏர் வேசு , கொரியன் ஏர் வேசு, நாசு ஏர் லைன் போன்ற பன்னாட்டு விமானங்களும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.

Comments
Post a Comment